CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Wednesday, July 8, 2009

பிரிவு ............


மடிய வேண்டும்
நான்
அல்லது உன் நினைவு

உன் நினைவு அது கடினம்
நான் அது எளிது ......

Friday, December 19, 2008

அடடா!!!! விடைக்கும் ஒரு வினா :) :) :)


பேனா குத்தி விட்டதோ என்று நான் கவலைக் கொள்ளவில்லை !!
குத்தி விடுமோ என்ற பயத்தில்
நான் எழுதவே இல்லை !!

காயம் பட்டு விடுமோ என்ற ஐயத்தில்.....
எழுதுவதைப் போல் பாவனை செய்தேன் .......
நீ அதை புரிந்துகொண்டாய் !!!

நட்பு :)


நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......

Friday, November 28, 2008

நிஜம் !!! :) :)



நினைவெல்லாம் நீயாக இருப்பின் ....
நிஜம் எதற்கு ???!!!!!

Thursday, November 6, 2008

என் சேயானால் ......... :) :)


"எனக்கு உங்கள விட்டுட்டு போக இஷ்டமே இல்லை "
"பதினஞ்சு நாள் தான அம்மா, சந்தோசமா போயிட்டு வா"

உள்ளிருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு
சிரித்தாய்.....
நான் சிறக்க வேண்டுமென....
கூறிவிட்டால் உன் தோழியும்
உன் வைரமாம் கண்ணீரை அவளிடம் காட்டிவிட்டாய் என .....!
நீ என்னிடம் காட்டாத வைரத்தை துடைத்து
உன்னை வழி அனுப்பியதிலும்.......
முதன் முறை பள்ளி செல்லும் குழந்தை திரும்பிப் பார்ப்பதைப் போல்
நீ பார்த்ததிலும் .......
நான் உன் தாயானேன் ......!!
நீ என் சேயானாய்.........!!

Sunday, November 2, 2008

எல்லைக்கோடு :)

எல்லைக்கோடில்லா உலகம் காண
கனவு கண்டேன் ........
அட போங்கடா.... :(
ஒரு மதில் சுவருக்கு
நீதி மன்றத்தில்
நீங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Saturday, November 1, 2008

கேட்டுவிடட்டுமா??

பேருந்தில் நீ அருகில் அமர்கையில்
உன்னிடம் கேட்டுவிட வேண்டும் என்று படபடத்தேன் !!
என் கற்பனைக் குதிரைகள் பறக்கின்றன ....
அது எப்படி குதிரைப் பறக்கும் என்கிறாயா?
நீ கேட்டுப் பாரேன் களிறு கூட பறக்கும் !!!!
குழம்பாதே பெண்ணே ....
நான் கேட்க்கிறேன் ...
முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே :(
என் கஷ்டம் பெரிதாகிவிடும் :(
சொல்கிறேன் பெண்ணே ....

ஆன்டி இந்த பாக் தலையனை மாறி வச்சிகோங்க ....
தொ மதுரை வர தான் ....
சும்மா ஜம்முனு தூங்கிட்டே வந்திருவேன் ...... :) :) :)

( ஹி ஹி ஹி ஹி ஹி ........... :D :D :D :D )