CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Monday, July 20, 2009

இப்படியெல்லாமா !!!!!!


வீட்டுக்குக் கிளம்பற குஷி :) :) வேளச்சேரி பேருந்து நிறுத்தம் .... ஒரு பஸ்சும் காணல ..... ஒரு வழியா வந்தது M70 எங்க ஊர்ல பாதி மக்கள் அளவு நிரப்பிக்கிட்டு (ஹப்பா இப்பவே கண்ணகட்டுதே ...)

தோழி : அடுத்த பஸ்சுல போலாமே ??
தோழி : ஊருக்கு போனுமா வேணாமா ?? வேற வழி இல்ல ல ... :( :(
நான் : இந்த ஆட்டோ??
(தோழிளிகளின் அனல் பறக்கும் பார்வைக்கு ... இந்த கூட்டம் தேவலை )
சரி சரி என்ன நின்னுட்டே இருக்கீங்க ஏறுங்க (ஹப்பப்பா )
யாருமே இடிக்கல :( :( :( :(
அடிச்சு புடிச்சு ஒரு ஸீட் கிடைச்சது :) :) :) (கடவுளுக்கு நன்றி :) )

அதான் ஸீட் கிடைச்சாச்சுல நம்ம வேலைய ஆரம்பிச்சாச்சு ......

மிகவும் அழகான நிகழ்வு : அம்மா, இரு குழந்தைகள்

சிறுவர்கள் : (மழலை அப்படியே :) :) :) ) அம்மா எப்ப நம்ப வீடு வரும் ??
அம்மா : இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும் கண்ணா :) :)
(அம்மா பேச்சை அப்படியே கேட்டுக் கொண்டார்கள் )
வா வா இறங்கு இறங்கு ..... பாத்து வா டா யாரையும் மிதிச்சிடாத :) :) :)
( அக்குழந்தைகள் மிகவும் கவனமுடன் யாரையும் முடிந்த அளவு உரசாமல் போக முயற்சித்தார்கள் :) :) :) :) :) ........... அந்த தாய்க்கு என் கைத்தட்டல்கள் )

அடுத்தது பக்கத்துல ஒரு அக்கா யாருக்கோ வழி சொல்லிட்டு இருந்தாங்க .... சரி இந்தப் பக்கம் இன்னொரு அக்கா சோனி எரிக்சனை குத்திக் கொலை பண்ணிட்டு இருந்தது .....
அது கடிச்சது நம்ம காதுலயும் கொஞ்சம் விழுந்தது .... :) :) :) :) :) :) :) பாவம் யாரு வீட்டுப் பிள்ளையோ அந்த பக்கம் திட்டு வாங்கறது .........

கண்டிப்பா காதலர்கள் தான் ....... போன்ல அந்த பக்கம் இருக்கறவன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல ... மறுபடியும் மறுபடியும் காலப் போட்டு திட்டுவாங்கினான் :) :) :) :)

உரையாடலில் சில ...... :

நம்ம அக்கா : சரி இதுவே கடைசியா இருக்கட்டும் .... இனி இந்த மாதிரி பண்ண நான்
என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ..........
(அதான் தெரியலனா விட வேண்டியது தான .... )
மறு முனை : .... ( ஏதோ )

நம்ம அக்கா : சரி மதியம் சாப்பிட்டியா ??

மறு முனை : (கற்பனை) ஹ்ம்ம்ம்ம் ......

நம்ம அக்கா : என்ன சாப்ட ??

மறு முனை : சாம்பார்

நம்ம அக்கா : தொட்டுக்க என்னது ??

மறு முனை : வெண்டைக்காய் ......

நம்ம அக்கா : தண்ணி குடிச்சியா??
(எனக்கு கொஞ்சம் கூட கடுப்பே ஆகல ...... )

மறு முனை : ஹ்ம்ம்ம்ம்ம் (ராசா உலக பொறுமைசாலி நீ தான் )

நம்ம அக்கா : இத்தனையும் நான் ஒன்னு ஒன்னுனா கேக்கணுமா ?? இதெல்லாம்
நீயா சொல்லனும்னு தெரியாதா??

(அடப் பாவிங்களா !!!!!!!!!!!!!!!! இது உங்களுக்கே டூ மச்சா இல்ல ..........
கைல இருந்த போன் எடுத்து ஏதாது தண்ணி லாரி மேல போட்டிருந்தா
அந்தப் பக்கம் இருந்தவனுக்காது வாழ்க்கைல வெளிச்சம் கிடைச்சிருக்கும்
................. ஒரு க்ரூப்பா தான் நடத்துறாங்க )

அப்பாட ஒரு வழியா கோயம்பேடு வந்த்துட்டு (கடவுளுக்கு இப்போ ரொம்ப ரொம்ப நன்றி ) ........... அக்கா இன்னும் முடிக்கல ..... நீங்க நடத்துங்க நான் எங்க ஊரப் பாத்து போறேன் (ஒரு வழியா எஸ்கேப் ...... ;) )

Wednesday, July 8, 2009

பிரிவு ............


மடிய வேண்டும்
நான்
அல்லது உன் நினைவு

உன் நினைவு அது கடினம்
நான் அது எளிது ......