CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »
Showing posts with label வலி. Show all posts
Showing posts with label வலி. Show all posts

Thursday, October 23, 2008

மனிதமா ??? அத தான் தொலைச்சிட்டு தேடறோம் :(

மனிதனை மனிதன் தின்னும் பழக்கம்
அதுவும் கூட சாதாரணம் ஆகிடும் நாளை

சாவு கூட ஒரு முறை தான்
அதுவே மேலானது என்கிறார்கள்

ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு
அடுத்த ஜென்மத்தில் பலனா??

கடவுளே நீயும் நீதி மன்றமாகிவிட்டாயா?
தீர்ப்பை அடுத்த ஜென்மத்திற்கு தள்ளிவிட்டாய் !

"இத ஒன்னும் பண்ண முடியாதா? "
"உன்னால தனியே ஒனும் பண்ண முடியாது "
சொல்லிட்டாங்க

சேர்ந்து பண்ணலாமே !!??

ஒரு காதல் பாட்டினால் காதலர்கள் உருவாகினால்?
ஒரு அழுகுரலுக்கு 10 கரங்கள் போக வேண்டாமா ?

நடப்பதெல்லாம் நல்லதுக்காம் .....
இது யாருக்கு நல்லதோ??!!!!!!!

இங்கே கிருக்கிவிட்டதால் கொட்டிவிட்டேன் என் குமுறலை
அவர்களால் தனியே இறக்கிவிட முடியுமா கண்ணீரையும்? வேதனையையும் ?

ரசிக்கல்லாம்னு பேர் வச்சிட்டு சத்யமா நினைச்சு கூட பாக்கமுடியலைங்க :'( :'(