CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Thursday, August 6, 2009

குழப்பங்களில் வந்த கிறுக்கல்கள்


கேள்விகள் ஆயிரம் இருக்கிறது
பதில் தெரியவில்லை
பதில் இதுவென்றால் நல்லது
பதில் இது இல்லை என்றால் மகிழ்ச்சி
ஏன் ....?????!!!!!!
மறுபடியும் விடை கேள்வியுடனே .....!!!!!!! ?????

தொடராய் கேள்விகள் மட்டும்
பதில் மட்டும் புரியாமல் !!!!!!!!!!!!!!!!!!!!!ஓட்டமும் நடையுமாக
வென்றுவிட வேண்டும் என்ற துடிப்பில்
பயணம் துவங்குகையில்
புரட்டிப் போட்டது விதி
தப்பித்தால் போதும் என்று
பயணத்தின் இறுதியில்
எல்லாவற்றையும் மறந்துவிடாதே என்கிறாயா??
அல்ல மறத்துப்போ என்கிறாயா ??
விளையாட்டின் அர்த்தம் இலக்கு எதுவும் அறியாமல் !!
வீரர்களை நாங்கள் !!!!
தோல்வி தான் வெற்றி என்கிறாய் நீ !!!!!!!!!!!!!!!

நொடிகளைக் கணக்கிடவில்லை
நினைவுகளை மட்டும்
வலியோ மகிழ்ச்சியோ!!!


நிச்சயமில்லாத நாளையில்
கொட்டிப் போட்டிருக்கும் கனவுகள்
வெத்து இடமாக இன்று ??!!!

Monday, July 20, 2009

இப்படியெல்லாமா !!!!!!


வீட்டுக்குக் கிளம்பற குஷி :) :) வேளச்சேரி பேருந்து நிறுத்தம் .... ஒரு பஸ்சும் காணல ..... ஒரு வழியா வந்தது M70 எங்க ஊர்ல பாதி மக்கள் அளவு நிரப்பிக்கிட்டு (ஹப்பா இப்பவே கண்ணகட்டுதே ...)

தோழி : அடுத்த பஸ்சுல போலாமே ??
தோழி : ஊருக்கு போனுமா வேணாமா ?? வேற வழி இல்ல ல ... :( :(
நான் : இந்த ஆட்டோ??
(தோழிளிகளின் அனல் பறக்கும் பார்வைக்கு ... இந்த கூட்டம் தேவலை )
சரி சரி என்ன நின்னுட்டே இருக்கீங்க ஏறுங்க (ஹப்பப்பா )
யாருமே இடிக்கல :( :( :( :(
அடிச்சு புடிச்சு ஒரு ஸீட் கிடைச்சது :) :) :) (கடவுளுக்கு நன்றி :) )

அதான் ஸீட் கிடைச்சாச்சுல நம்ம வேலைய ஆரம்பிச்சாச்சு ......

மிகவும் அழகான நிகழ்வு : அம்மா, இரு குழந்தைகள்

சிறுவர்கள் : (மழலை அப்படியே :) :) :) ) அம்மா எப்ப நம்ப வீடு வரும் ??
அம்மா : இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும் கண்ணா :) :)
(அம்மா பேச்சை அப்படியே கேட்டுக் கொண்டார்கள் )
வா வா இறங்கு இறங்கு ..... பாத்து வா டா யாரையும் மிதிச்சிடாத :) :) :)
( அக்குழந்தைகள் மிகவும் கவனமுடன் யாரையும் முடிந்த அளவு உரசாமல் போக முயற்சித்தார்கள் :) :) :) :) :) ........... அந்த தாய்க்கு என் கைத்தட்டல்கள் )

அடுத்தது பக்கத்துல ஒரு அக்கா யாருக்கோ வழி சொல்லிட்டு இருந்தாங்க .... சரி இந்தப் பக்கம் இன்னொரு அக்கா சோனி எரிக்சனை குத்திக் கொலை பண்ணிட்டு இருந்தது .....
அது கடிச்சது நம்ம காதுலயும் கொஞ்சம் விழுந்தது .... :) :) :) :) :) :) :) பாவம் யாரு வீட்டுப் பிள்ளையோ அந்த பக்கம் திட்டு வாங்கறது .........

கண்டிப்பா காதலர்கள் தான் ....... போன்ல அந்த பக்கம் இருக்கறவன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல ... மறுபடியும் மறுபடியும் காலப் போட்டு திட்டுவாங்கினான் :) :) :) :)

உரையாடலில் சில ...... :

நம்ம அக்கா : சரி இதுவே கடைசியா இருக்கட்டும் .... இனி இந்த மாதிரி பண்ண நான்
என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ..........
(அதான் தெரியலனா விட வேண்டியது தான .... )
மறு முனை : .... ( ஏதோ )

நம்ம அக்கா : சரி மதியம் சாப்பிட்டியா ??

மறு முனை : (கற்பனை) ஹ்ம்ம்ம்ம் ......

நம்ம அக்கா : என்ன சாப்ட ??

மறு முனை : சாம்பார்

நம்ம அக்கா : தொட்டுக்க என்னது ??

மறு முனை : வெண்டைக்காய் ......

நம்ம அக்கா : தண்ணி குடிச்சியா??
(எனக்கு கொஞ்சம் கூட கடுப்பே ஆகல ...... )

மறு முனை : ஹ்ம்ம்ம்ம்ம் (ராசா உலக பொறுமைசாலி நீ தான் )

நம்ம அக்கா : இத்தனையும் நான் ஒன்னு ஒன்னுனா கேக்கணுமா ?? இதெல்லாம்
நீயா சொல்லனும்னு தெரியாதா??

(அடப் பாவிங்களா !!!!!!!!!!!!!!!! இது உங்களுக்கே டூ மச்சா இல்ல ..........
கைல இருந்த போன் எடுத்து ஏதாது தண்ணி லாரி மேல போட்டிருந்தா
அந்தப் பக்கம் இருந்தவனுக்காது வாழ்க்கைல வெளிச்சம் கிடைச்சிருக்கும்
................. ஒரு க்ரூப்பா தான் நடத்துறாங்க )

அப்பாட ஒரு வழியா கோயம்பேடு வந்த்துட்டு (கடவுளுக்கு இப்போ ரொம்ப ரொம்ப நன்றி ) ........... அக்கா இன்னும் முடிக்கல ..... நீங்க நடத்துங்க நான் எங்க ஊரப் பாத்து போறேன் (ஒரு வழியா எஸ்கேப் ...... ;) )

Wednesday, July 8, 2009

பிரிவு ............


மடிய வேண்டும்
நான்
அல்லது உன் நினைவு

உன் நினைவு அது கடினம்
நான் அது எளிது ......

Friday, December 19, 2008

அடடா!!!! விடைக்கும் ஒரு வினா :) :) :)


பேனா குத்தி விட்டதோ என்று நான் கவலைக் கொள்ளவில்லை !!
குத்தி விடுமோ என்ற பயத்தில்
நான் எழுதவே இல்லை !!

காயம் பட்டு விடுமோ என்ற ஐயத்தில்.....
எழுதுவதைப் போல் பாவனை செய்தேன் .......
நீ அதை புரிந்துகொண்டாய் !!!

நட்பு :)


நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......

Friday, November 28, 2008

நிஜம் !!! :) :)நினைவெல்லாம் நீயாக இருப்பின் ....
நிஜம் எதற்கு ???!!!!!

Thursday, November 6, 2008

என் சேயானால் ......... :) :)


"எனக்கு உங்கள விட்டுட்டு போக இஷ்டமே இல்லை "
"பதினஞ்சு நாள் தான அம்மா, சந்தோசமா போயிட்டு வா"

உள்ளிருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு
சிரித்தாய்.....
நான் சிறக்க வேண்டுமென....
கூறிவிட்டால் உன் தோழியும்
உன் வைரமாம் கண்ணீரை அவளிடம் காட்டிவிட்டாய் என .....!
நீ என்னிடம் காட்டாத வைரத்தை துடைத்து
உன்னை வழி அனுப்பியதிலும்.......
முதன் முறை பள்ளி செல்லும் குழந்தை திரும்பிப் பார்ப்பதைப் போல்
நீ பார்த்ததிலும் .......
நான் உன் தாயானேன் ......!!
நீ என் சேயானாய்.........!!