CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Saturday, October 25, 2008

ரசித்தப் பாடல் :)


திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆவோம்
பறந்தோடும் மானை போலே பிரிந்தொடி போனதெங்கள் நாணம்

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி வட்டம் போடும் பட்டாம் பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
ஓடி ஓடி ஆழம் விழுதில் ஊஞ்சல் ஆடும் ஒற்றை கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல் ??

அந்த வானம் பக்கம்
இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்

நெஞ்சில் ஏக்கம் வந்தால்
கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது thannaich சொல்லுதோ
இல்லை உன்னைச் சொல்லுதோ

அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அதோ அங்கே
ஹயயோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதே

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நம்மில் திறக்கின்றது
மேகம் போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதி வாசி
உன் கண்கள் மூடும் காலம் காணக் காணக் காணக் காதல் யோசி

கை தட்டித் தட்டித் தட்டிப் பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லி அனுப்பு
அட என்னை நினைத்து அதைச் சொல்லி அனுப்பு

என் காலடியில் சில வீடுகள் நகருதே
இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆகாகா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ இவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்கு பூட்டு போடு
காட்டுக்குள் ஓடி ஆடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

3 comments:

Ganesh Gopalasubramanian said...

நான் திரு.இளையராஜா அவர்களின் இசைப்பிரியன். எனக்கு இசை என்றால் திரு.இளையராஜா தான். அதனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டிருந்தாலும் வரிகளின் ஆழத்தை கவனித்ததில்லை. பாடலில் மனம் ஒப்பவில்லை. ஆனால் இப்பொழுது படிக்கையில் எண்ணம் விசாலமடைந்தது. வரிகளுக்கு நன்றி!

Nivedhida Devi said...

நன்றி அண்ணா :)

முதல்ல கேட்க்கும்பொழுது வரிகளை நானும் கவனிக்கவில்லை அண்ணா .....
பிற்பாடு கேட்க்கும்பொழுது தான், மனம் வரிகளோடு குதிப்பதைக் கவனித்தேன் :) :) :) :) :)

viwin said...
This comment has been removed by the author.