CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Friday, August 22, 2008

என்னால் சின்ட்டுக்கு வந்த சோதனை காலம் ........


ஒரு விளையாட்டு அரங்கம், சின்ட்டு ( எறும்பு ) மிகவும் சுறு சுறுப்பாக தன் வேலையில் மூழ்கி இருந்தது ...
நேத்து இரவு முழுதும் இந்த பசங்க விளையாடினதுல நமக்கு நல்ல வேட்டை தான், ஆனாலும் இந்த பசங்கள பாராட்டும் .. சளைக்காம சாப்பிடரானுக !!!!!
கஷ்டப்பட்டு தன் வீட்டுக்குள்ள போன சின்ட்டுவ சென்னு ( விட்டி ) பாத்துட்டு இருந்தது ....
இந்த பயலுக்கு வேற வேலையே இல்லையா ?? !! ஏலேய் சின்ட்டு சும்மா என்னத ல தூக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் உலாத்திட்டு இருக்குற??
அட சென்னு என்ன ல எப்டி இருக்குற ?? ஹா ஹா ஹா சும்மா கப் குடுக்க வந்தவரு மாதிரி அங்கனகுள்ள உக்காந்துட்டு இருக்க ?? பாத்து ல பயலுக பந்த நடு மண்டைல போற்ற போறானுக :) :)
ஒய் நாங்கலாம் சிங்கம் ல ... வர பந்த அப்டி எ கேட்ச் பிடிச்சு திருப்பி ஸ்பின் போடுவோம்ல :) :) சரில சாப்ட தான கட்டிட்டு போற .... சொல்லு நான் உன்ட ஒன்னும் கேக்க மாட்டேன்.... :) :) :)
என்னல சென்னு உனக்கு தராமலா .... :( நம்ம அப்டியா பலகிறுக்கோம்?? :(
டேய் டேய் பீலிங்க்ஸ் போடாதடா :) :) நீ பாசகார பயனு எனக்கு தெரியும்டா :) :) :) :)சரி வேலைய முடிச்சிட்டு வா ல :) :)
சின்ட்டுகு இப்ப தான் மூச்சே வந்தது :) :) சரில வாரேன் :) :)
சின்ட்டு வரதுக்குள்ள சென்னு தூங்கிட்டு
ஆகா தூங்கிட்டானே .... எட்பி எழுபறது ??சரி அவனா என்திக்கட்டும் ...
எலேய் எங்க கிளம்பிட்ட ??என்திசிட்டியா?? இந்தால லேய்ஸ் ல புது ப்லவௌர் வந்திருக்கு போல உனக்கு பிடிக்கும்னு எடுத்தாந்தேன் :) :) :)
இருவரும் சாப்பிட்டார்கள் .....
எலேய் சின்ட்டு என்னல எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு அளஞ்சுகிட்டே இருக்குற ?? இத்துனூண்டு இருந்துக்கிட்டு அவ்ளோத்தையும் எப்படில சாப்படற?? நமக்கு அர லேய்ஸ் சிப்ஸ் எ கம்முனு ஆகிடுது !!
போ ல நான் ஒன்னும் சாப்பாட்டு ராமன் கிடையாது :( குளிர் காலத்துல நம்மளால இப்படி அலைய முடியுமா ?? அதன் இப்போவே சேத்து வைகேன் :)
போடா லுசு பயலே ... இருகர நேரத்த மேட்ச் பாத்தோமா, நாலு விசில் அடிச்சோமா, பயலுக பக்கதுல இருக்கத சாப்டோமா, தூங்கினோமா அப்டின்னு இல்லாம சேத்து வைகிரியலோ ??
டேய் சென்னு அப்டி .... டேய் டேய் நிப்பாட்டு ஆனா ஊனா அட்வைஸ் போடா ஆரம்பிசிடுவியே ..... நாங்கலாம் சிங்கம்ல :) :) :)
சின்ட்டு வழக்கம் போல் அமைதி ஆனது ....
இப்படியே இரண்டு பேருக்கும் நேரம் போனது ....
குளிர் காலமும் வந்தது ....
சென்னு இந்த பனில என்ன பண்ணுவான் ??
சென்னு ஒரு ஸ்வட்டர் போட்டுக்கிட்டு வெளில ஏதாது கிடைக்கானு பாக்க வந்தது ....
என்னடா இது இப்படி குளிருது !! ஒரு பயலும் ஆள காங்கல !! எனாத்த சாப்படறது ??
நம்மக்கு தான் சின்ட்டு பய இருக்கான்ல அவன் வீடு பக்கம் போவோம் ......
தக்கி முக்கி எப்படியோ ஒரு வழியா சின்ட்டு வாசல் வந்தடைந்தது சென்னு .....
டேய் சின்ன்ன்ன்ட்டு சாப்பிட ஏதும் வச்சிருக்கியாட ???
காத்து பலமா அடிச்சதால சின்ட்டுகு சத்தம் ஒன்னும் கேக்கல .... ஜன்னல் கதவு எல்லாத்தையும் மூடி வச்சிருந்தது சின்ட்டு
சென்னு பசியாலயே சத்தம் வெளில வரல, அடுத்து அடிச்ச ஒரு பலமான காத்துல அரங்கம் நாற்காலி போல்ட்ல மோதி சரியான அடி பட்டு கீழ விழுந்தது சென்னு ....கொஞ்சம் நஞ்சம் இருந்த உயிரும் குளிர்ல உறைஞ்சு உருகி காணாம போச்சு :( :( :(
சென்னு நிலமைய பாத்தா பயலுவ .... சின்ட்டு தான் சென்னுவ கொன்னுடான்னு முடிவு பண்ணிடானுக :( :( :(
போலீஸ் காரைங்க கதவ தட்டி மேட்டர் எ சொன்னது தான் சின்ட்டு அழுது புரண்டு சென்னுவ பாக்கனும்னு அழுதது .... :( :( ஒரு பயலுவளும் விடல ....
சின்ட்டு எவ்வளவோ சொல்லி பாத்தது ..... யாரும் சின்ட்டுவ நம்பல :( :( :(
சின்ட்டு மேல எப்.ஐ.ஆர் போட்டானுக , கோர்டுக்கும் கொண்டு போய்ட்டானுவ ... :( :( :(
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




என்னாட இந்த பொண்ணு சின்ன பிள்ளைல படிச்ச கதைய அப்படி எ உல்ட்டா பண்ணி சொல்லுதுன்னு நினைக்கீங்களா ??
ஹா ஹா ஆமாங்க ... இது என் கனவுல வந்தது .... வசனம் மட்டும் என்னோட கற்பனை .... கதைய எப்படி முடிக்கணும்னு தெரில .... :) :) நீங்க யாரது கிளைமாக்ஸ் சொல்லுங்க :) :) :) :)




8 comments:

Ganesh Gopalasubramanian said...

என்னத்த சொல்ல... நிவேதிதா கிட்ட இப்படி ஒரு வட்டார வழக்கா? (regional slang)... சத்தியமா யாரையும் இந்த உலகத்துல நம்ப முடியல... நம்ம பொறியியல் கல்லூரில சேர்ந்து "நிறைய" படிச்சிட்டே போலிருக்கு... ஆனா கோவில்பட்டி வழக்கு, மதுரை வட்டார வழக்கும் திருநெல்வேலி வட்டார வழக்கும் சேர்ந்த கலவைன்னு உன் எழுத்து நடையில தெரியுது.

நல்ல கற்பனை. கோவில்பட்டி சுற்று வட்டாரத்திலிருந்து நிறைய படைப்பாளிகள் வந்திருக்காங்க.
படிக்க...
* மகாகவி பாரதி
* கி.ராஜநாராயன்
* யுவன் சந்திரசேகரன்
* கோணங்கி
* தேவதச்சன்

எழுத்தின் வீரியமும் எழுத்தின் தரமும் கூட எதாவது ரசனை சார்ந்த விசயத்தைப் பற்றி எழுதலாம். சமீபத்தில் பார்த்த சினிமா விமர்சனம், அம்மா பார்க்கும் நெடுந்தொடர், வீட்டிலிருக்கும் நாய்க்குட்டியின் விளையாட்டுத்தனம் என சின்ன சின்ன ரசனை மிகுந்த விசயங்கள் நிறைய இருக்கின்றன. முயல்க.

தமிழில் "காலச்சுவடு" மற்றும் "உயிர்மை" மாத இதழ்கள் படிக்கலாம். எழுத்தின் தரம் கூட அவை உதவும்.
வளர்க...

Vishnu... said...

ரெம்ப நல்லா இருக்கு ..."என்னால் சின்ட்டுக்கு வந்த சோதனை காலம் ........"
எழுத்து நடை அருமை

நிறையவே எழுதுங்க ...

வாழ்த்துக்கள் ....

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

நிவேதிதா தேவி said...

அட கணேஷ் அண்ணா வாங்க உங்கள தான் எதிர்பாத்துட்டு இருந்தேன் :) :) உங்களின் பின்னூட்டம் எனக்கு பெரிய ஊட்டம் :) :) :) மிக்க மகிழ்ச்சி அண்ணா :) :) நன்றி அண்ணா :) நம்ம கல்லூரி பங்கு இல்லாமலா??!!! (நிறைய படிக்காதுனால அண்ணா ) :) கண்டிப்பா எல்லாத்தையும் முயற்சி பண்றேன் அண்ணா :) :) :)

நிவேதிதா தேவி said...

நன்றி விஷ்ணு :) :) கண்டிப்பா விஷ்ணு அவர்களே :) :) :)

Unknown said...

மிகவும் நன்றாக இருக்கிறது

Unknown said...

நன்றி கார்த்தி :) :)

viwin said...

ellarum nalla irukunu adichurukinga climax sollama poitinga.boss feed back thaan pinnootam ah.chancae illa.nice word.ippa thaan therinchu kittaen.............ok kathaiku varuvome.courtku kondu pona sintuku fits vanthuruchu.udane judge aiya ivarai kunapaduthum varai ennal thandai koduka mudiathu.the court is adjourned nu sollitaru.avanum fits varamaari yae act vittan.pani kaalamae mudinchu pochu.apram avan kanavula avan frd vanthu solraan.dai mapla ennala thaana unaku ivlo kastam.na athuku oru idea solraen atha vechu ne es ayidunu.antha idea enna theriuma ?????????????????????????????????????????????????? suspense...........................................................ithuku maela kathaiya iluka mudiala.yaarathu mudinga pa..........

நிவேதிதா தேவி said...

@ viwin


ஹ்ம்ம்ம்ம் ஆமா விவின் :)

அருமை :P :P .... ஒரு படம் பார்த்த ஏபக்ட் :) :) :) :) :)
நன்றி நன்றி :) :)